மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு திருநெல்வேலி மற்றும் கிராம உதயம் தலைமை அலுவலகம் கோபால சமுத்திரம் இணைந்து இன்று கிராம உதயம் தலைமை அலுவலகத்தில் வைத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த நிகழ்வை மாவட்ட முதன்மை நீதிபதி மாண்புமிகு.குமரகுரு அவர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்கள். கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஷ்வரி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.
கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வழக்கறிஞர் டாக்டர் புகழேந்தி பகத்சிங் கிராம உதயம் பகுதி பொறுப்பாளர்கள் ஜெபமணி ஆறுமுகத்தாய் ஆகியோர் கருத்துரை ஆற்றினார்கள். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி திருமிகு. செந்தில் முரளி நன்றியுரை வழங்கினார்கள்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் சார்பாக மனுக்கள் கொடுக்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் மஞ்சள் துணிப்பைகள் வழங்கப்பட்டது.


