செய்துங்கநல்லூர் வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில் மல்பெரி சாகுபடி குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடந்தது.
கருங்குளம் வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் மாநில திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் மூலம் பட்டுவளர்ச்சி துறையின் சார்பில் மல்பெரி சாகுபடி பயிற்சி செய்துங்கநல்லூர் வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில் நடந்தது.
பயிற்சியில் கருங்குளம், வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் தலைமையேற்று கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து கூறினார். பட்டுவளர்ச்சி துறை உதவி ஆய்வாளர் பிரேமா மல்பெரி சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விளக்கமளித்தார். வி.எம்.சத்திரம் அரசு செயல்விளக்க மையம் இளநிலை ஆய்வாளர் டயானா பட்டுவளர்ச்சி துறை திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். தூத்துக்குடி, விதைச்சான்று உதவி இயக்குநர் .சுரேஷ் விதைச்சான்று துறை திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். வாகைகுளம், வேளாண்மை அறிவியல் மைய பொருட்சிறப்பறிஞர் முருகன் மண்வள மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு கூறினார். கருங்குளம், வேளாண்மை துணை அலுவலர் பரமசிவம் வேளாண்மைத்துறை திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு கூறினார்.
வேளாண் பயிற்சிக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த விட்டிலாபுரம் கோவில்பத்து, செய்துங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பங்குபெற்றனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ரகுநாத், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர்கள் ராஜலெட்சுமி, மகேஸ்வரி, முத்துசங்கரி ஆகியோர் செய்திருந்தனர்.


