தாமிரபரணி நதிநீர்ப் பாதுகாப்புப் பேரவை தலைவர் நட்டாத்தி நயினார் குலசேகரன். இவர் மறைந்து 4 ஆண்டுகள் நிறைவுற்றது. இவருக்கு ஏரல் பஜாரில் வைத்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் படம் வைத்து அதற்கு மலர் மாலை சூட்டி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சிக்கு நல்லாசிரியர் வில்சன் வெள்ளையா தலைமை தாங்கினார். ஏரல் வியாபாரிகள் சங்க தலைவர் தசரதப்பாண்டியன் , செய்துங்கநல்லூர் விவசாய சங்க தலைவர் குமார், சமூகச் செயற்பாட்டாளர் ஜெயபாலன், ஏரல் பேரூராட்சி மன்றத் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி தலைவர் அ.வியனரசு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நயினார் குலசேகரன் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் ச.ம.கவை சேர்ந்த முத்துக்குமரன் மளவராயநத்தம் விவசாய ஆர்வலர் இராகவன், திமுக கொற்கை மாறன் மற்றும் இராஜபதி விவசாயிகள் இராமசந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை நயினார் குலசேகரன் நீர்வளநில வளப் பாதுகாப்புப் பேரவை தலைவர் வரதை பா.செல்வம் தலைமையில் ஆர்வலர்கள் செய்திருந்தனர்.

செய்துங்கநல்லூர் பஜாரில் நயினார் குலசேகரன்படத்துககு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமையில் பலர் கலந்துகொண்டனர்.


