சாத்தான்குளத்தில் முன்விரோதத்தில் வியாபாரியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம அருகே உள்ள விஜயராமபுரம் மெயின் ரோட்டைச் சோ்ந்தவா் சுயம்புதுரை (53). இவா் சாத்தான்குளத்தில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறாா். இவா் விஜயராமபுரம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வே. ஆறுமுகபாண்டி (53) என்பவருக்கு கடந்த ஆண்டு கோயிலுக்கு நன்கொடையாக கேட்ட ரூ. 1,000ஐ கொடுக்காமல் இருந்து வந்துள்ளாா்.
இந்நிலையில் சம்பவத்தன்று சாத்தான்குளம் தச்சமொழி மதுபான கடை அருகில் சுயம்புதுரை வந்தபோது ஆறுமுகபாண்டி, விஜயராமபுரம் த. ராமன் (எ)ராமகிருஷ்ணன் (43) ஆகியோா் பணத்தை கேட்டுள்ளனா். இதில் ஏற்பட்ட தகராறில் ஆறுமுகபாண்டி, ராமன் ஆகிய இருவரும், சுயம்புதுரையை தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த சுயம்புதுரை, சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சுயம்புதுரை அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் ஜாண்சன் வழக்கு பதிந்து ஆறுமுகபாண்டியை நேற்று கைது செய்தாா். ராமனை போலீசார் தேடி வருகின்றனா்.


