ஆசிரியர் கழகப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் இரா. சின்னத்தாய் விடுத்துள்ள செய்திக்குறிப்பு : சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழக பேராசிரியர் பணிக்கு ஆங்கிலம், வணிகவியல், கணிதம் ஆகிய துறைகளில் எம்ஃபில், செட், நெட் கல்வித் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 03.08.2022க்குள் கல்லூரி அலுவலகத்தில் தங்கள் சுய விவரத்துடன் மதிப்பெண் சான்றிதழையும் பட்டயச் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.


