செய்துங்கநல்லூரில் செயல்படமால் கிடக்கும் சித்த மருத்துவமனையை சட்டமன்ற உறுப்பினர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் சித்த மருத்துவமனை அமைந்துள்ளது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வரை இந்த சித்த மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இதற்கிடையில் மருத்துவமனையில் பணியாற்றிய சித்த மருத்துவர் ஓய்வு பெற்ற காரணத்தினால் அந்த மருத்துவமனை மூடப்பட்டது.
எனவே மூடப்பட்ட இந்த சித்த மருத்துவமனைய திறக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அந்த மருத்துவமனையை திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மருத்துவமனை செயல்பட்ட காலங்களில் பொதுமக்கள் பயன்கள் குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து கருங்குளம் ஒன்றியத்தில் இதுகுறித்து பேசி இந்த சித்த மருத்துவமனையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
அவருடன் செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன், கருங்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் காந்தி, வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் பக்கப்பட்டி சுரேஷ், செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து எழுத்தர் சங்கரபாண்டியன், இளைஞரணி செயலாளர் மாசிலாமணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மதுபாலாமணி, கிளைசெயலாளர் குண்டுமணி, அருண்ராஜ் உள்பட பலர் உடன் வந்திருந்தனர்.


