நாகர்கோவில், திருப்பூரில் நடைபெற உள்ள ராணுவ ஆள் சேர்ப்பு திரளணியில் தூத்துக்குடி இளைஞர்கள் பங்கேற்க ஆட்சியர் செந்தில்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
இராணுவ வேலைவாய்ப்பு திரளணி நாகர்கோவிலில் 21.08.2022 முதல் 01.09.2022 வரை, திருப்பூரில் 20-09-2022 முதல் 01.10.2022 வரை மற்றும் வேலூரில் 15.11.2022 முதல் 25.11.2022 வரை நேரடி இராணுவ பணி சேர்ப்பு திரளணி நடைபெற உள்ளது.
இப்பணிக்கு விருப்பமுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொள்கிறார். மேலும் விவரங்களுக்கு “உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், தூத்துக்குடி மாவட்டம்” என்னும் முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.


