கருங்குளத்தில் பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்கினார். பாஜக வணிகர் பிரிவு மாநில தலைவர் ராஜ கண்ணன், கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் மாணிக்கம் உள்ளிட்ட பலர் பேசினர்.
கூட்டத்தில், தூத்துக்குடி மாநகரத்தில் இளைஞர்கள் கஞ்சா மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி சீரழிந்து வருவதை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தூத்துக்குடி மாணவர்கள் நடைபெறும் பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடித்திட வேண்டும். கருங்குளம் சுற்றுவட்டார மக்கள் பயனிடும் வகையில் செயல்பட்டு வந்த விவசாய கூட்டுறவு வங்கி மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும். கடம்பா குளத்தை மழைக்காலத்திற்கு முன்பு தூர்வாரி மலை வெள்ளத்தில் இருந்து ஆத்தூர் சுற்றுவட்டார விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். ஸ்ரீவைகுண்டத்தில் செயல்பட்டு வரும் மருத்துவமனை விரிவாக்கம் செய்ய வேண்டும். திருச்செந்தூர் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவைகுண்டம் தாதன்குளம் செய்துங்கநல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


