தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலூகா வல்லகுளம் அரசர்குளம் கிராமத்தில் தானியங்கி கண்காணிப்பு கமராவை சொந்த செலவில் வழங்கி திறந்து வைக்க ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ வருகை தந்திருந்தார். திறப்பு விழாவிற்கு காமராஜர் நற்பணி மன்ற தலைவர் பால்துரை தலைமை வகித்தார். பஞ்சாயத்து தலைவர் கமலா , செல்லப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சிகாமராசு பேசும் போது தற்போது 75 வது சுதந்திர தினவிழாவை இந்தியா கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இந்த வேளையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 200 க்கு மேற்பட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் சுதந்திரத்திற்கு போராடியுள்ளனர்.அவர்களை ஆவணப்படுத்த மாவட்ட ஆட்சி தலைவர் மரு. கி. செந்தில்ராஜ் ஏற்பாடு செய்துவருகிறார். இதற்கிடையில் இவர்களின் வாரிசுகளை தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் என்ற நிலையில் ஊர்வசி அமிர்த்த ராஜ் அவர்கள் அனைவரையும் அழைத்துபாராட்டு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை செய்வதாக ஊர்வசி அமிர்த ராஜ் வாக்களித்தார். மேலும் ஊர் இளைஞர்கள் பெண்கள் ஊரின் அருகில் உள்ள கல்கோரியால் ஊரில் பல்வேறு பிரச்சனை ஏற்படுகிறது. வீடுகள் குழுங்குகிறது. எனவே பெரும் விபத்து ஏற்படும் முன்பு கோரியை நிறுத்த ஏற்பாடு செய்யவேண்டும்என கோரிக்கை விடுத்தனர். அதற்கும் எம்.எல்.ஏ உடனடியாக மாவட்ட ஆட்சி தலைவரிடம்இது குறித்து பேசுவதாக அறிவித்தார்.
முன்னதாக கண்காணிப்பு கேமராவை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார். அவருடன் சாத்தான்குளம் சங்கர், புங்கன், கருங்குளம் சுயம்பு, பொன்செண்டு, அருமைநாயகம், குமார், செல்லத்துரை, செல்வக்குமார், தாதன்குளம் ராமன், ராணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


