ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் காமராஜர் தெருவில் பெருந்தலைவர் காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு டெய்லர் தங்கவேல் தலைமை வகித்தார். பால்பாண்டி, செல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் கருங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் உதயசங்கர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு நோட்டுகள் வழங்கினார்.
சுயம்புலிங்கம், ஜான்லி, ராமா டெய்லர், பொன்ராஜ், கிருஷ்ணன், அருள்மணி, டிவி கண்ணன், டைசன், பிரேம். ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


