தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பேருந்து நிலையத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட துணை செயலாளர் சங்கர் கலந்து கொண்டு கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் பெருமாள், ஒன்றிய துணைச் செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய பிரதிநிதி மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


