தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மல்லல் புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம். அவரது மனைவி பால்தங்கம். இவர்களுக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர். மகன்கள் அனைவரையும் தினமும் ஊரின் மேல்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து பேருந்து மூலம் பேய்குளத்தில் உள்ள பள்ளியில் படிக்க அனுப்பி வைத்து வருகிறார்.
இன்று காலை மகன்களை பள்ளிக்கு அனுப்ப பால்தங்கம் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் பால்தங்கம் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுண் தாலிச்செயினை பிடித்து இழுத்துள்ளனர். அதனை விடாமல் பிடித்துள்ளார் பால்தங்கம். பின்னர் மர்ம நபர்கள் பால்தங்கத்தின் முகத்தில் தாக்கி அவரிடம் இருந்து தாலிச்செயினை பறித்து அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இதுகுறித்து பால்தங்கம் தனது கணவரிடம் நடந்ததை கூறி சேரகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சேரகுளம் போலிசார் நகையை பறித்துச் சென்றவர்களை வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் செயினை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


