செய்துங்கநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற தர்க்கா சந்தை பக்கீர் மஸ்தான் சாகீப் தர்க்கா. இந்த தர்க்காவில் கந்தூரி விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இதையட்டி முதல்நாள் பீமா தைக்கா தெருவில் இருந்து அரண்மனை கொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. அதன் பின் கொடியேற்றி கந்தூரி விழா துவங்கியது. தொடர்ந்து ராத்திரி சந்தை பக்கீர்மஸ்தான் சாகீப் தர்காவில் விளக்கு ராத்திரி நடைபெற்றது. மறுநாள் தப்பருக் என்னும் நேர்ச்சை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கந்தூரி விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


