திருநெல்வேலி ரோட்டரி கிளப்பில் 80 வது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆவுடையப்ப குருக்கள் மற்றும் செயலாளர் திருவாளர் அரவிந்த் கிருஷ்ணசாமி ஆகியோர் கடந்த வாரம் பதவியேற்றனர். அவர்கள் பதவி ஏற்ற உடன் முதல் வாரந்திர கூட்டம் பாளையங்கோட்டை முருகன் குறிச்சி வி.வி.டவரில் வைத்து நடந்தது. எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு “தாமிரபரணி வற்றாமல் இருக்கும் ரகசியம்” என்ற தலைப்பில் பேசினார். இதில் தாமிரபரணி வற்றாமல் இருக்க காரணமான இயற்கை பற்றியும், செயற்கையாக கட்ட பட்ட அணைககட்டுகள் பற்றிய பெருமைகளையும் பேசினார். மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் டூ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னாள் ரோட்டரி தலைவர்கள் ஜெரால்டு செல்வராஜ், ரமணி, சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


