தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் கிராமம் மேற்கு தெருவில் வசிப்பவர் ராஜபாண்டி (77) இவர் கடந்த 40 ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக குடிசை வீட்டில் வசித்து வந்தாராம். நேற்று மாலை வீட்டில் பீடி பிடித்துவிட்டு அணைக்காமல் போட்டதாக கூறப்படுகிறது. இதில் குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததல் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


