செய்துங்கநல்லூரில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் கருங்குளம் ஒன்றிய மாநாடு நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கருங்குளம் ஒன்றிய மாநாடு நடந்தது.
இந்த மாநாட்டிற்கு ஒன்றிய தலைவர் மாடசாமி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கண்ணன் வேலை அறிக்கை வாசித்தார். மாநிலச் செயலாளர் முத்து காந்தாரி நிறைவுரை ஆற்றினார்.
இந்த மாநாட்டில் 58 பெண்கள், 45 ஆண்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை முழுவதும் வழங்க வலியுறுத்தியும், முழு ஊதியம் வழங்க வலியுறுத்தியும், 80 சதவீதத்துக்கு மேல் உள்ள ஊனத்திற்கு மாற்றுத்திறனாளி துறையிலிருந்து உதவித்தொகை வழங்க வலியுறுத்தியும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டில் ஒன்றிய தலைவர் மாடசாமியும், ஒன்றிய செயலாளர் கண்ணனும், ஒன்றிய பொருளாளர் கால்வாய் மணி மந்திரமும் தேர்வு செய்யப்பட்டனர்.


