தூத்துக்குடியில் சாலையில் படுத்திருந்த மாடுமீது பைக் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். மேலும் 2பேர் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் சங்கரன் மகன் சதீஷ் (20). கிருஷ்ணராஜ புரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் ஹரி பிரசாத் (19), ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்த முனியசாமி மகன் சந்தன மாடசாமி (18). இவர்கள் 3 பேரும் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்கள். நேற்று இரவு 8 மணியளவில் மூரும் ஒரே பைக்கில் தூத்துக்குடி பண்டுக்கரை சாலையில் கொண்டிருந்தனர்.
பைக்கை சதீஷ் ஓட்டி சென்றார். மற்ற 2பேரும் பின்னால் அமர்ந்திருந்தனர். இந்நிலையில் சாலையின் நடுவில் மாடு ஒன்று படுத்திருந்ததால் எதிர்பாராத விதமாக பைக் மாடு மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தனம் மாடசாமி பரிதாபமாக இறந்தார். மற்ற 2பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து மத்திய பாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


