தேனியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு சொற்சுவை தேனீ விருது வழங்கப்பட்டது.
தேனி தமிழ்ச்சங்கம் மற்றும் சிபா ஆதித்தனார் தமிழில் ஆய்வுக் கழகம் வழங்கிய இணையவழி 150 உரை நிகழ்வுகளில் 15 உரையாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சொற்சுவை தேனீவிருது வழங்கும் நிகழ்ச்சி தேனி ஹோட்டல் வெஸ்டர்ன் கார்ட்ஸ் கூட்ட அரங்கில் நடந்தது.

இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேர்களுக்கும் திருச்சிராப்பள்ளி சிபா ஆதித்தனார் தமிழில் ஆய்வுக் கழக தலைவர் முனைவர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் பல்கலைகழகம் துணை வேந்தர் திருவள்ளுவன் விழா பேரூரையாற்றி விருதுகளை வழங்கினார். இதில் தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரைச் சேர்ந்த வரலாற்று எழுத்தாளரும், தாமிரபரணிக்கரை பிரபல எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு சொற்சுவை தேனீ விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தேனி தமிழ் சங்க துணைச் செயலாளர் ரேணுகாதேவி வரவேற்புரை ஆற்றினார். தேனி தமிழ்ச் சங்கத் தலைவர் தேனி சுப்பிரமணியன், செயலாளர் பொன்முடி, பொருளாளர் அஹமது பாஷா, துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திண்டுக்கல் ஆர்விஎஸ் கல்வி குழும இயக்குனர் கிருஷ்ணகுமார் பாராட்டுரை வழங்கினார். தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் சங்கம் முறை கல்வி நிறுவனங்கள் தலைவர் ராஜமோகன், தேனி கம்மவார் சங்க பொதுப்பள்ளி மற்றும் நிர்வாக செயலாளர் சேதுராஜன் வாசு ஆகிய ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தேனி தமிழ் சங்க துணை செயலாளர் முருகேசன் நன்றி உரையாற்றினார்.


