ஆறாம்பண்ணையில் மாபெரும் இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவப் பிரிவு மற்றும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் பாளையங்கோட்டை கிளை இணைந்து ஆறாம்பண்ணை கிராமம் துணை சுகாதார நிலையத்தில் வைத்து மாபெரும் இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் ஷேக் அப்துல் காதர் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். மருத்துவர்கள் செல்வகுமார், சிவரஞ்சனி ஆகியோர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் அனைத்து நோய்களுக்கும் சித்தா மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தி தரும், அமுக்கிரா மாத்திரை நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. 300 மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர்.
முகாமில் கிராம சுகாதார செவிலியர் சதாசிவத்தம்மாள், இடைநிலை கிராம சுகாதார செவிலியர் திருமணி சுதா, பெண் சுகாதார தன்னார்வலர் சீதாலட்சுமி, சுகாதார ஆய்வாளர் ஜான் நேசகுமார், உதவியாளர்கள் ரத்தினராஜ், மேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.


