ஸ்ரீவைகுண்டம் அருகே நள்ளிரவில் தோட்டத்திற்குள் நுழைந்து வாழைத் தார்களை திருடிய 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராய குறிச்சி கிராமம், கிழக்கு தெருவை சேர்ந்தவர் போஸ் மகன் துரைசிங் (26). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் வாழை பயிரிட்டு இருந்தார். கடந்த 2 வார காலமாக வாழ்த்தார்கள் காணாமல் போனதாம். இதனால் துரைசிங் நள்ளிரவில் காவல் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது 2 வாலிபர்கள் வாழைத் தார்களை வெட்டி திருடிச் செல்வதைப் பார்த்து அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்துள்ளார்.
பின்னர் 2பேரையும் திருவைகுண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் அருள் சாம்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கொங்கராயகுறிச்சி அம்பேத்கர் நகரை சேர்ந்த லட்சுமணன் மகன் கார்த்திக் (23), பெருமாள் மகன் விக்னேஷ் (22) ஆகிய 2பேரும் சேர்ந்து துரைசிங் தோட்டத்தில் 65 வாழைத்தார்கள் திருடியதாக ஒப்புக்கொண்டனர். இதன் மதிப்பு ரூ.70 ஆயிரம் ஆகும். இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.


