செய்துங்கநல்லூர் நெல்லை திருச்செந்தூர் மெயின்ரோட்டில் அமைந் துள்ள அருமையான பேரூர்.இவ்வூரில் ரெயில்வே ஸ்டேசன், வார சந்தை, துணை சுகாதார நிலையம், பஸ் நிலையம். வங்கிகள், நூலகம் என அனைத்து வசதிகளும் கொண்ட ஊர். ஒரு காலத்தில் இந்த ஊர் மிகுந்த காடாக இருந்துள்ளது. தாமிரபரணியில் ஆற்று வெள்ளத்தை கட்டுப்படுத்தி அணைக் கட்டு கட்டப்பட வில்லை.
இதற்கிடையில் சேனைத் தலைவர் சமுதாயங்கள் வடக் கில் இருந்து தென்பகுதிக்கு குடியேறிக் கொண்டிருந்தனர். சேனைத் தலைவர் என்பது அப்பகுதியில் ஆண்ட அரசர் களின் படைகளுக்கு தலைவராக இருந்த காரணத்தால் ஏற்பட்டது. முருக பெருமானின் போர்ப்படை தளபதி வீரபாகு சேனை தலைவர் படைகளுக்கு தலைவராக இருந்ததாலும் அனுபவம் பெற்று அறிவில் மூத்து இருப்பதால் மூப்பு ஆனார் என்று போற்றப்பட்டு அவர்களே மூப்பனார் என்றும் அழைக்கப் பட்டனர்.
இதற்கிடையில் தென்பகுதியில் வந்த இவர்கள் படை தலைமை பொறுப்பு குறைந்து விவசாய தொழிலில் ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தார்கள். இவர்களுக்கு மிக பிடித்த தொழில் வெற்றிலை கொடிக்கால் தொழில். ஆகவே நீர்பரப்பு மிகுந்த பகுதியில் இவர்கள் தங்கி கொடிக்கால் விவசாயம் செய்ய ஆரம்பித் தனர்.
இப்படியாக கிருஷ்ணபுரம் பரம்பில் ‘பற்பகுளம்’ பகுதியில் கொடிக்கால் தொழில் செய்து அங்கேயே குடியிருந்து வந்தனர். இதற்கிடையில் 600 ஆண்டு களுக்கு முன்பு தாமிரபரணியில் மருதூர் அணை தடுப்பு அணை யாக கட்டப்பட்டு செய்துங்க நல்லூர் போன்ற பல பகுதியில் குளங்கள் வெட்டப்பட்ட போது தங்களது தொழிலை செய்துங்க நல்லூருக்கு மாற்றி இங்கே குடியமர்ந்து கொடிக்கால் தொழில் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
பெரும்பாலுமே மூப்பனார்கள் பின் வருவதை யோசனை செய்து தங்களது குடியிருப்புகளை அமைத்துக் கொள்ளும் மரபு படைத்தவர்கள். அதுபோலவே செய்துங்கநல்லூர் வந்தவுடனேயே மக்கள் தங்களுக்கு ஒரு கோயிலை அமைக்க ஆசைப் பட்டனர்.
இங்கிருந்த திருவரங்க செல்வி அம்மனை தங்களது தாய் தெய்வமாக வழிப்பட்ட இவர்கள் பின் தங்கள் இஷ்டமாக பிள்ளையார் கோவில் ஒன்றை கட்ட ஆசைப்பட்டனர்.
இதற்கிடையில் இவ்வூரில் பக்தி மானாக வாழ்ந்த முதிய சேனையர் ஒருவர். கனவில் பிள்ளையார் தோன்றி என் தந்தை. போன்று நான் சிவ அம்சத்துடன் செய்துங்க நல்லூரில் அமர உள்ளேன். ஆகவே எனக்கு சோமசுந்தர விநாயகர்’ என்று பெயர் வையுங்கள். நான் இப்பகுதி யில் உள்ள மக்களை கண்ணின் இமை போல காத்து கொள்கிறேன்’ என்று கூறி மறைந்தார்.
காலை எழுந்தவுடன் அவர் ஊரில் கூற மக்கள் உடனே அதற்காக பிரமாதமாக தற்போது பிள்ளையார் கோவிலில் உள்ள இடத்தினை தேர்ந்தெடுத்தனர்.
கட்டும் போது மிக பிரமாண்டமாக கோவிலை கட்டி சோமசுந்தர விநாயகர் என்று பெயர் சூட்டினர். சோமசுந்தரர் என்றால் அழகானவர் என்று பெயர்.
இந்த அழகான பிள்ளையார் அற்புதமானவர். இவரை நம்பி வந்து வணங்கி நிற்பவர்களை வாழ வைத்து பார்ப்பார். அப்போது இக்கோவிலை சுற்றி இருந்த குடியிருப்புகள் எல்லாம் மிக பள்ளமாக கிடந்தது. ஆனால் தற்போது தெருக்கள் மட்டும் உயராமல் மக்களும் வாழ்க்கை தரத்தில் உயர்ந்து காணப் படுகிறார்கள்.
செய்துங்கநல்லூரில் வந்து குடியமர்ந்த முதல் மக்களான மூப்பனார் சமுதாய மக்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலுக்கு அனைத்து சமுதாய மக்களும் வந்து வணங்கி நிற்கிறார்கள்.
இத்தெருவிற்கு வாடகைக்கு வரும் அன்பர்கள் கூட பிள்ளையார் தரிசனம் மற்றும் பக்கத்து வீட்டு மக்கள் கரிசனத்தால் இங்கேயே தங்கி விடுகிறார்கள். இந்த
கோவிலுக்கு 3 தடவை கும்பாபிசேகம் நடந்துள்ளது. முதல்
தடவை 20-4-1970 நடந்துள்ளது.
1145-ம் ஆண்டு சித்திரை 7-ல் காலை 9.46 முதல் 1040 வரை மிதுன லக்கனத்தில் தர்மகர்த்தா மா.நரசிம்ம மூப்பனார் தலைமை யில் நடைபெற்றது.
அப்போது அன்பளிப்பாக சு.மா. சுடலையாண்டி மூப்பனார் 265-ம். சிவ. சு.அ.சங்கரசுப்பு மூப்பனார் 255-ம்,
வழுதூர் டி.பி.எஸ். ஏஜெண்ட் மா கந்த சாமி 251-ம் கூ.ஆறுமுகமூப்பனார் 201-ம் அன்பளிப்புகொடுத்து பணி நடந்ததாக
கல்வெட்டுகள் கூறுகிறது. இந்த மண்டல
பூஜை 1-6-70 அன்று முடிந்துள்ளது. அதன்பின் 2-ம் முறையாக நடை பெற்ற கும்பாபிசேகம் வெகுசிறப்பாக 1166 ஆனி மாதம் 17-ந்தேதி 1-7-1991ல் திங்கட் கிழமை அவிட்ட நட்சத்திரத்தில் மதுரை பிரம்மஸ்ரீ யோகானந்த கிரி சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
இச்சமயம் தர்மகர்த்தாவாக லெ. அய்யாச்சாமி மூப்பனார் பணியாற்றி வந்தார். கும்பாபிசேக கமிட்டி தலைவ ராசு மா.நரசிங்க மூப்பனார் உப தலைவ ராக சிவலிங்கமூப்பனார் செயலாளராக தனுஷ்கோடி மூப்பனார். துணைச் செயலாள ராக மகாலிங்கம் மூப்பனார் பொருளாளராக ஆறுமுகம் மூப்பனார் ஆகியோர் பணியாற்றினார். 15-8-1991ல் மண்டல பூஜை நிவர்த்தி யானது.
14 வருடங்களுக்கு பிறகு இன்று 24-6-2005 காலை கும்பாபிசேகம். நடந்து முடிந்துள்ளது. இக்கோவிலை பொறுத்தவரை முன்னொரு காலத்தில் மிக பெரிய விசேச மெல்லாம் நடந்துள்ளது.
30 வருடங்களுக்கு முன்பு இக் கோவிலில் வசந்த தெப்ப திருவிழா. தாமிரபரணி தீர்த்தவாரி, தரா அபிசேகம், நெல்லையப் பர் கோவில் திருவிழா போன்று பிரமாண்டமான திருவிழா நடை பெற்றது.
சோமசுந்தரர் என்றால் பிறை தாங்கிய பெருமான் என்ற மகேசனை குறிக்கும். அந்த கீர்த்தி அளிக்கும் விநாயகர் சைவ ஆகம விதிபடி அமைக்கப்பட்ட ஒரே பிள்ளையார் கோவில் இதுவே என்றும் கூறப்படுகிறது. தீட்சிதர் பலர் இங்கு வந்து வணங்கி சென்றுள்ளனர்.
தற்போது இக் கோவிலில் சங்கடஹர – சதுர்த்தி மாதந்தோறும் நடைபெறுகிறது. இதில் மாதந்தோறும் சப்பரம் எழுந்தருளி வருகிறது. கார்த்திகை திருவிளக்கு பூஜை மாதம் தோறும் நடக்கிறது. இதில் கேட்ட வரம் தரும் விநாயக பெருமானின் அருளால் மாதம் தோறும் விளக்குகள் எண்ணிக்கை பெருகி வருகிறது.
இக்கோவிலில் சுப்பையா என்ற மூக்கையா மூப்பனார் முயற்சியில் வள்ளி தெய்வானை முருகன் பிரதீட்சை செய்யப்பட்ட பின்பு திருமண காரியங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இங்கு சித்திரை மாதம் விசு திருவிழா வும், வைகாசி மாதம் விசாக திருவிழா வும் ஆனி மாதம் வருஷாபிஷேகமும், ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தியும், ஐப்பசியில் கந்தசஷ்டியும். கார்த்திகையில் திருவிளக்கு பூஜை மற்றும் திங்கள் தோறும் சோமவாரம் மற்றும் திருவண்ணாமலை புராணம் நடக்கிறது. மார்கழியில் பஜனை குழுவினர் வீதிஉலா வரும் காட்சி ‘கண்கொள்ளா காட்சியாகும். மாசி மாதம் சிவராத்திரி உள்பட பல திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
24-6-2005 கும்பாபிசேகத்தையொட்டி பல லட்சம் செலவில் முன் பகுதியில் மணி மண்டபம் கட்டப்பட்டு பணி சீறும் சிறப்புமாக நடைபெற்றுள்ளது.
நான்காவது முறையாக வருகிற 6 ந்தேதி காலையில் 6 மணிக்கு கும்பாபிசேகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் சேனைத்தலைவர் சமுதாயத்தினர் செய்து வருகிறார்கள்.
– முத்தாலங்குறிச்சி காமராசு


