செய்துங்கநல்லூரில் உலக மலேரியா தின விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் ஜோஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் உலக மலேரியா தின விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜெய்தூண் பீவி தலைமை வகித்தார்.
சுகாதார பணிகள் இயக்குநரின் மாவட்ட நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், மாவட்ட பூச்சியியல் வல்லுநர்-கருப்பசாமி, மாவட்ட சுகாதார கல்வியாளர்-அந்தோணிசாமி, சுகாதார ஆய்வாளர்கள், சண்முக பெருமாள், அரிராமச்சந்திரன், ஷர்பின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மலேரியாவால் பெரியவர்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து மலேரியாவை ஒழிக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது.


