தாமரைக்கண்ணன் என அறியப்படும் வீ. இராசமாணிக்கம் தாமரைக்கண்ணன் என அறியப்படும் வீ. இராசமாணிக்கம் ஜூலை 2, 1934 – சனவரி 19, 2011 ஒரு தமிழக எழுத்தாளர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், நூல் மதிப்புரையாளர், பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியரும் ஆவார்.இவர் எழில், அன்பெழிலன், கண்ணன், யாரோ, அம்சா, ஜனநாதன், பாஞ்சாலி மகன், அச்சிறுபாக்கத்தார், அகரத்தான் போன்ற புனைப் பெயர்களிலும் எழுதி வந்தார்.
தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் உள்ள ஆட்சிப்பாக்கம் எனும் சிற்றூரில் வீராச்சாமி மற்றும் பாஞ்சாலி ஆகியோருக்குப் பிறந்தார். தந்தை ஆசிரியராகப் பணிபுரிந்தவர். தாமரைக்கண்ணன் உயர்நிலைப்பள்ளிக்கல்வியை சென்னையிலும் ஆசிரியர் பயிற்சிக்கல்வியைத் திருவள்ளூரிலும் பயின்றார். 1980 இல் சென்னைப் பல்கலைக்கழகத்திலும், 1983 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் இளங்கலைப் பட்டங்கள் பெற்றார்., 1984 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை (தமிழ்) தேர்வும், 1990 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.எட். தேர்வுகள் எழுதி பட்டங்கள் பெற்றார். மேலும் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1965 முதல் 1991 வரை ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
சிறுகதை, நாவல், நாடகம், வரலாறு, கல்வெட்டு ஆய்வு, குழந்தை இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 52 நூல்கள் எழுதியுள்ளார்.[2] 2, 1934 – சனவரி 19, 2011 ஒரு தமிழக எழுத்தாளர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், நூல் மதிப்புரையாளர், பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியரும் ஆவார்.இவர் எழில், அன்பெழிலன், கண்ணன், யாரோ, அம்சா, ஜனநாதன், பாஞ்சாலி மகன், அச்சிறுபாக்கத்தார், அகரத்தான் போன்ற புனைப் பெயர்களிலும் எழுதி வந்தார்.
தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் உள்ள ஆட்சிப்பாக்கம் எனும் சிற்றூரில் வீராச்சாமி மற்றும் பாஞ்சாலி ஆகியோருக்குப் பிறந்தார். தந்தை ஆசிரியராகப் பணிபுரிந்தவர். தாமரைக்கண்ணன் உயர்நிலைப்பள்ளிக்கல்வியை சென்னையிலும் ஆசிரியர் பயிற்சிக்கல்வியைத் திருவள்ளூரிலும் பயின்றார். 1980 இல் சென்னைப் பல்கலைக்கழகத்திலும், 1983 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் இளங்கலைப் பட்டங்கள் பெற்றார்., 1984 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை (தமிழ்) தேர்வும், 1990 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.எட். தேர்வுகள் எழுதி பட்டங்கள் பெற்றார். மேலும் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1965 முதல் 1991 வரை ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
சிறுகதை, நாவல், நாடகம், வரலாறு, கல்வெட்டு ஆய்வு, குழந்தை இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 52 நூல்கள் எழுதியுள்ளார்.


