பாரதத்தின் மிக உயரிய ஜனாதிபதி பதவிக்கு .தகுதியும், திறமையும் வாயந்த திரௌபதி முர்மு-வை வேட்பாளராக அறிவித்திருக்கிறது பாஜக
பாஜக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் பழங்குடியின திரவுபதி முர்மு ஒரிசா மாயுர்புஞ்ச் மாவட்டத்தில் 1958 ஜூன் 20 ந்தேதி பிறந்தவர்.
ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் பட்டம் படித்த இவர் ஆசிரியராக பணிபுரிந்தவர். 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் மற்றும் சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
ஒரு சாதாரண கவுன்சிலராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய திரௌபதி முர்மு 2 முறை ஒடிசா மாநில சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து இருக்கிறார்.
பாஜகவை சேர்ந்த இவர் கடந்த 2000 வது ஆண்டில் ஒடிசாவில் பாஜக, பிஜு ஜனதா தளம் கட்சி கூட்டணி ஆட்சி நடந்தபோது அமைச்சராக பதவியேற்றார்.
ஒடிசா மாநிலத்தில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், அதைத் தொடர்ந்து மீன்வளம் மற்றும் விலங்குகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து இருக்கிறார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டதன் மூலம், ஒடிசாவிலிருந்து ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் மற்றும் முதல் பழங்குடியின ஆளுநர் என்ற அவர் பெருமையை பெற்றார்.
இந்த நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக- வின் சிறப்பான வேட்பாளர் தேர்வுக்கு.பாராட்டுகள்.


