ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றின் கரையில் அமர்ந்து மது அருந்தியவர் நிலைதடுமாறி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள அகப்பைகுளம் கிராமம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மோசஸ் ராஜாமணி மகன் ராஜன் (43). இவர் ஸ்ரீவைகுண்டம், புதுக்குடி தாமிரபரணி ஆற்றின் கரையில் அமர்ந்து மது அருந்தினராம். அப்போது போதை அதிகமாகவே ஆற்றுக்குள் தவறி விழுந்து விட்டாராம். இதில் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


