தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் ஒரு நாகராஜா சிலை கிடப்பதை அப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த மக்கள் கண்டனர்.
உடனே கருங்குளம் ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இதுகுறித்து கருங்குளம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் கிடந்த நாகர் சிலையை மீட்டு போலிசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலிசார் கருங்குளம் பொறுப்பு கிராம நிர்வாக ஆய்வாளர் கந்தசுப்புவிடம் ஒப்படைத்தார்.
அவர் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். பின்னர் அந்த சிலை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வைப்பறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.


