ஆழ்வார்திருநகரியில் இருந்து நாசரேத் செல்லும் வழியில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள சாலையை சீரமைத்து புதுப்பிக்கும் பணிக்காக ரூபாய் 186 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் துவக்க விழா ஆழ்வார்திருநகரியில் இன்று நடந்தது. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் கோபிநாத், ஆழ்வார்திருநகரி காங்கிரஸ் வட்டார தலைவர் கோதண்டராமன், ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவி சாரதா பொன் இசக்கி, துணைத்தலைவர் சுந்தர்ராஜ், முன்னாள் திமுக நகர செயலாளர் முத்துராமலிங்கம், திமுக பிரதிநிதி ஸ்ரீதர், ஆதி உடையார், மாரியப்பன், ரஞ்சித் மோகன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட செயற்பொறியாளர் விஜய்சுரேஷ், உதவி பொறியாளர் சிபின், காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் சங்கர், மாவட்ட பொருளாளர் எடிசன், மாவட்ட இளைஞரணி ஜெயசீலன், காங்கிரஸ் வட்ட துணை தலைவர் கருணாகரன், ஊடகப்பிரிவு மரியராஜ், நகர பொறுப்பாளர் அபுதாகிர், வட்டாரச் செயலாளர் சிவசக்தி வேல், வட்டாரச் செயலாளர் சேகர், வட்டார பொருளாளர் விஜயன், நகர துணைத் தலைவர் ஆஸ்கின், இளைஞர் காங்கிரஸ் செயலாளர் குமார், வட்டாரச் செயலாளர் மோகன்ராஜ், இளைஞர் காங்கிரஸ் வட்டார செயலாளர் ரெங்கராஜன், வட்டார பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார், கேம்பலாபாத் கிராம கமிட்டி தலைவர் அஜிமுல்லா, மாடசாமி, ராமச்சந்திரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


