கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மிகவும் பழமையான பள்ளி. இந்த பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு விடிவெள்ளியாக இருந்த இந்த பள்ளியில் பலர் பத்தாம் வகுப்பு 12 வகுப்பு தேர்வு எழுதி வருகிறார்கள். ஆனால் இதுவரை எந்த பொதுத் தேர்விலும் மாணவர்கள் சென்டம் பெறவில்லை. இந்த ஆண்டு கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 28 மாணவர்கள் எழுதிய தேர்வில் 28 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி வரலாற்றில் முதல் முதலாக இந்த வருடம் மாணவர்கள் சென்டம்பெற்று சாதனை புரிந்து உள்ளனர். 12 வது வகுப்பில் 31 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் 27 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். முதல் முதலாக சென்டம் பெறக் காரணமாக இருந்த மாணவர்கள் ஆசிரியர்களுக்குத் தலைமை ஆசிரியர் சிலுவை ஸ்டியுவர்ட் இனிப்பு வழங்கி பாராட்டினார்.


