தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் ரூ.2 லட்சம் செலவில் காவலர்களுக்கான உடற்பயிற்சிக் கூடத்தை எஸ்பி பாலாஜி சரவணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள ரூ.2 லட்சம் மதிப்புடைய உடற்பயிற்சி உபகரணங்களை கொண்டு ஆயுதப்படை காவலர்களுக்கு புதிதாக உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உடற்பயிற்சிக் கூடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து ஆயுதப்படை வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்து ஆயுதப்படையில் உள்ள துப்பாக்கிகள், கைதுப்பாக்கிகள், தோட்டாக்கள் உட்பட பல்வேறு ஆயுத தளவாடங்களை பார்வையிட்டும், ஆயுதப்படையில் பாராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளை ஆய்வு செய்தும் அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது ஆயுதப்படை ஆய்வாளர் சுடலைமுத்து, உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன், ஈஸ்வரமூர்த்தி, சங்கரலிங்கம் உட்பட காவல் துறையினர் உடனிருந்தனர்.


