கோபாலசமுத்திரம் கிராம உதயம் , நெல்லை கேன்சர் கேர் சென்டர் இணைந்து நடத்தும் இலவச புற்று நோய்க்கான விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் பக்கப்பட்டி சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. மு.புதுகிராமம் பஞ்சாயத்து தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். மையத்தலைவி வேலம்மாள் வரவேற்றார். சென்னை உதவும் உள்ளங்கள் மருத்துவ அலுவலர் டாக்டர் அபிராமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இலவச மருத்துவத்துறை பொறுப்பாளர் , தன்னார்வ தொண்டர் கணேசன், குழுத்தலைவர்கள் புஷ்ப ராணி, மாரியம்மாள், ரோஸ்மேரி சரஸ்வதி உள்பட பலர் கலந்துகொண்டனர். தன்னார்வ தொண்டர் கனகவல்லி நன்றி கூறினார்.


