இந்திய இராணுவக் கல்லூரி சேர்க்கைக்கான தகுதி தேர்வுக்கு 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது பயிலும் சிறார்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் மூலம் நடத்தப்படும் இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரி, டெராடூன் – ஜனவரி 2023 சேர்க்கைக்கான தகுதித் தேர்வுக்கு 01.01.2023 அன்று 11½ வயது நிரம்பியவரும், 13 வயது அடையாதவரும் விண்ணப்பிக்கலாம்.
02.01.2010க்கு பின்னதாகவும், 01-07-2011-க்கு முன்னதாகவும் பிறந்த 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது பயிலும் சிறார்கள் மட்டும் தகுதியுடையவராவார்கள். தகுதித் தேர்வு 2022 ஜீன்; 04-ம் தேதி நடைபெறுகிறது. விண்ணப்பத்தினை The Commandant, RIMC, GarhiCantt, Dehradun, Uttarakhand, PIN-248003 என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் (இரட்டை பிரதி) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்திற்கு 24.04.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் கிடைக்கப் பெற வேண்டும். மேலும் தகவல்களுக்கு www.rimc.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.


