சாத்தான்குளம் அருகே இடப்பிரச்னையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 17பேர்கள் மீது போலீசார் வழககுப் பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் ஆர்தர் மனைவி தெரஸா (48). இவரது பேரன் மதன். இதனிடையே தெரஸாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த அற்புதராஜ், வெங்கட் ஆகியோர் இடையே இடப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில் அற்புதராஜ், வெங்கட் தூண்டுதலின்பேரில் அதே பகுதியை சேர்ந்த தங்கப்பழம் மகன் சாலமோன், வீடுபுகுந்து தெரஸா, அவரது பேரன் மதன் ஆகியோரை அவதூறாக பேசி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சாலமோன் உள்ளிட்ட 3 பேர் மீதும் தட்டார்மடம் உதவி ஆய்வாளர் பென்சன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும், சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சாலமோன் மகன் தனசிங்ஜெயராஜ்(32) என்பவருக்கு சொந்தமான பைக்கை அதே பகுதியை சேர்ந்த சாலமோன்ராஜா மகன் செல்வாஸ், உள்ளிட்ட 11 பேர் சேதப்படுத்தி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம். புகாரின்பேரில் செல்வாஸ் உள்ளிட்ட 11 பேர் மீது தட்டார்மடம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுபோல் சுப்பிரமணியபுரத்தில் இடப்பிரச்னை தொடர்பாக செல்வஆசீர் (45) என்பவருக்கு சொந்தமான கார் கண்ணாடியை அதே பகுதியை சேர்ந்த கெர்சன், ஜோஸ்வா, செல்வாஸ் ஆகிய 3பேரும் உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. புகாரின்பேரில் கெர்சன் உள்ளிட்ட 3பேர் மீதும் தட்டார்மடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


