2. பேரூர் – ஒரு குடும்பத்து தியாகிகள் செந்தில்பெருமாள்- லெட்சுமி அம்மாள்- பால்பாண்டி
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் பேருர் கிராமத்திலுள்ள தேசிய சுதந்திர செந்தில் விநாயகர் கோவில்” சுதந்திர தின வழிபாடு நடைபெற்று வரும் கோவிலாகும். இக்கோவிலை சுதந்திரபோராட்ட தியாகியான செந்தில்பெருமாள் 12.07.1948ம் ஆண்டு கட்டியுள்ளார்.
பேரூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் செந்தில் பெருமாள். தேசத்தின் விடுதலைக்காக போராடிய வ.உ.சிதம்பரனார், வாஞ்சிநாதன், பா£ரதியார், காந்தியடிகள் மீது தீராத பற்றுக்கொண்டு, அதன்பால் சுதந்திர போராட்டதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். இவரோடு இவரது மனைவி லட்சுமி அம்மாள் , மைத்துனர் பால்பாண்டி ஆகியோரும் சுதந்திர போராட்டத்தில் ஈடுப்பட்டனர் . ஒரே குடும்பத்தில் மூன்று பேர் சுதந்திரபோராட்டில் ஈடுபட்டார்கள் என்ற பெருமை தூத்துக்குடி மாவட்டம், ,ஸ்ரீவைகுண்டம் தாலூகா பேரூரை சேரும்.
உப்பு சத்தியாகிரக போராட்டத்தை காந்தியடிகள் மேற்கொண்டபோது ஆறுமுகநேரில் அப்போராட்டத்தை நடத்தி சிறை சென்றவர் செந்தில்பெருமாள் . அந்நியருக்கு எதிரான தொடர் போராட்டத்தின் மூலமாக காந்தியடிகளின் மனம் கவர்ந்தவர்களில் தியாகி செந்தில்பெருமாளும் ஓருவராவார்.
நாட்டு விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்பணித்து பணியாற்றிய தியாகி செந்தில்பெருமாள் எந்தபணியையும் விநாயகரை வணங்கிவிட்டே துவங்குவது வழக்கமாகும். சுதந்திர கிடைத்துவிட வேண்டும் என்பதற்காக தனது இல்லத்திற்கு அருகிலேயே விநாயகர் கோவில் கட்டுவதற்கான பணிகளை துவங்கினார் .
இந்த நேரத்தில் சுதந்திரம் கிடைத்து விடேவ, மகிழ்ச்சி கொண்ட தியாகி செந்தில் பெருமாள் தான் கட்டிய விநாயகர் கோவிலுக்கு தேசிய சுதந்திர செந்தில் விநாயகர் கோவில் என்று பெயர் சூட்டினார். கோவில் கோபுரத்தின் வலதுபக்கம் தேசத்தந்தை காந்தியடிகள் , இராஜாஜி மற்றும் இடதுபக்கம் நேதாஜி , நேரு ஆகியோரின் சிலைகளை பதித்தார். தேசத்தலைவர்களின் சிலைகளுக்கு நடுவில் பாரதமாதாவின் சிலையை வைத்து வழிபட்டார்.
தியாகி செந்தில்பெருமாள் விநாயகர் கோவிலில் துவங்கி வைத்த சுதந்திர தின வழிபாடும். சுதந்திர தின உரையாற்றுதலும் இன்றும் பாரம்பரியம் குறையாமல் மூன்றாவது தலைமுறையாக தொடர்கிறது.
தற்போது தாத்தா வழியில் சுதந்திர தின வழிபாடுகளை தவறாமல் நடத்திவரும் அவரது பேரன் செந்தில்குமார் எங்களிடம் பேசினார். அவர் பேசும் போது , எங்க குடும்பத்திலே மூன்று தியாகிகள் இருந்தது பெருமைக்குரியதாகும். காந்தியடிகள் இப்பகுதிக்கு வந்த போது, அவர் மீது தீராத பற்றுக் கொண்டிருப்பதை அறிந்த எங்கள் தாத்தாவை சந்தித்துள்ளார். அப்போது சுதந்திர போராட்ட நிதியாக ரூ.3 ஆயிரம் கொடுத்து காந்தியின் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டனர் எனது தாத்தாவும், பாட்டியும். எங்க பாட்டி சுதந்திர போராட்ட செலவிற்காக தன் நகைகயையெல்லாம் கழற்றி கொடுத்து விட்டார். எங்கள் தாத்தா மிகப்பெரிய கட்டிட ஒப்பந்தகாரர். அருகில் உள்ள பேட்மாநகரம் போன்ற ஊர்களில் வெளிநாட்டில் சம்பாத்தியம் செய்து என் தாத்தாவிடம் அந்த பணத்தினை ஒப்படைக்க நியாயமான முறையில் அவர் கட்டிடத்தினை கட்டி கொடுத்துள்ளார். ஆகவே தான் எங்கள் தாத்தா பெயர் இன்றும் போற்றப்படுகிறது. எங்க தாத்தா காலத்தில் அவர் தேசிய சுதந்திர விநாயகர் கோவிலில் துவங்கப்பட்ட சுதந்திர தின, குடியரசு தின விடுதலை போராட்ட வரலாற்று வழிபாடுகள் இன்றும் அதே சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆறுமுகநேரியில் சுதந்திபோராட்ட தியாகி செல்வராஜ் எம்.எல்.ஏ அவர்களிடம், பெஞ்சமின் அவர்களிடமும் எங்கள் தாத்தா பெயரை கூறியவுடன் அவர்கள் மரியாதை செய்தார்கள். எங்களை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வைத்ததே உங்கள் தாத்தா தான் என்கிறார்கள். அந்த அளவுக்கு எங்கள் தாத்தா சுதந்திரபோராட்டம் அனைவரும் அறியும் வண்ணம் உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்.நல்லகண்ணு ஸ்ரீவைகுண்டம் பெரும்பத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பம் பசும்பொன் தேவரோடு நல்ல நெருககம் கொண்டிருந்தது.
காங்கிரஸ் பொதுக்கூட்டங்களுக்காக 1934 முதல் 1939 வரை நெல்லை மாவட்டத்தின் பல ஊர்களில் பசும்பொன் தேவர் சுற்றுப் பயணம் செய்து வந்தார். நாட்டு விடுதலை என்றால் என்னவென்றே தெரியாத ஊர்களிலும், காங்கிரஸ் என்றால் எதுவுமே தெரியாத கிராமங்களிலும் தேவர் பேசினார்.
நெல்லையைப் பொறுத்த வரையில் எம்.சி.வீரபாகு பிள்ளை, டி.எஸ். ஆதிமூலம், கருணாகர பாண்டியன், எஸ்.செல்லபாண்டியன், எஸ்.எஸ்.கரையாளர், வக்கீல் சின்னத்தம்பி தேவர், எஸ்.டி.ஆதித்தன் ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் தேவரை அழைத்து அவர்கள் பொதுக் கூட்டங்கள் நடத்தி வந்தனர்.
பசும்பொன் தேவர் ஸ்ரீவைகுண்டம் வந்தபோது அவருக்கு உதவியாக ஒரு மாணவரை நியமித்திருந்தார்,எஸ்.டி.ஆதித்தன். அவர் ஆர்.நல்லகண்ணுவின் அண்ணன் ஆர்.முத்துராமலிங்கம். பின்னர் அவர் ஐ.ஆர்.எஸ், அதிகாரியாக உயர்ந்தார்.
எளிமையாகவும், தனிப்பட்ட விரோதங்கள் இன்றியும் இருப்பது பசும்பொன் தேவரின் அரசியல் பாணி, அதே நேரத்தில் தனது கொள்கையை யாருக்காகவும், எந்த நேரத்தில் விட்டுத்தரமாட்டார்.
ஸ்ரீவைகுண்டம் ஜில்லா போர்டுக்கு காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டவர் செந்தில் பெருமாள், அவரை ஆதரித்துப் பசும்பொன் தேவர் பிரச்சாரம் செய்தார்.
கம்யூனிஸ்ட்கள் சார்பாகப் பெருங்குளம் பால்பாண்டியன் செந்தில் பெருமானை எதிர்த்துப் போட்டியிட்டார். பசும்பொன் தேவர் ஸ்ரீவை-குண்டம் வரும் போதெல்லாம் செந்தில் பெருமாள் வீட்டில் சாப்பிடுவார்.
அதே போல் பசும்பொன் தேவர் செந்தில் பெ-ருமாள் உள்ளிட்ட காங்கிரஸ்காரர்கள் பெருங்குளம் பகுதிக்குச் சென்றால் பால்பாண்டியன் வீட்டில் சாப்பிடுவார்கள்.
ஜில்லா போர்டு தேர்தலில் செந்தில் பெருமாள் வெற்றி பெற்றார். அவருக்கு பசும்பொன் தேவர் தலைமையில் ஒரு பாராட்டுவிழா நடைபெற்றது. அதில் தோல்வியுற்ற பால்பாண்டியன் கலந்துகொண்டு அவருக்கு மாலை அணிவித்தார்.
செந்தில் பெருமாள் ஜில்லா போர்டு மெம்பராக இருந்தபோது கட்சிப் பணிகளுக்காகவோ, சொந்த வேலைகளுக்காகவோ யாராவது வந்தால் அவர் வீட்டில் தான் சாப்பாடு தன் சொந்த செலவில் அரசு அலுவலர்கள் சென்று காரியத்தை முடித்துக் கொடுப்பார் செந்தில் பெருமாள்.
பொதுவாழ்க்கையில் பசும்பொன் தேவர் பாணியை பின்பற்றி வந்தார் செந்தில் பெருமாள். இதனால் ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்களுக்கு காங்கிரஸ் கட்சி மீது பெருத்த நம்பிககை ஏற்பட்டது.
தற்போதும் செந்தில் பெருமாள் வாரிசுகள் தியாகி பென்சன் வாங்கிகொண்டிருக்கிறார்கள்.
அதுபோல் “தேசிய சுதந்திர செந்தில் விநாயகர் கோவில்” சுதந்திர தின வழிபாடு நடைபெற்று வருகிறது.


