108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றானதும் தூத்துக்குடி மாவட்டத்தில் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியின் கரையோரம் அமைந்துள்ள ஆன்மிக சிறப்புபெற்ற நவதிருப்பதி கோவில்கள் 7வது திருப்பதியாக தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் திருக்கோவில் அமைந்துள்ளது.
சுமாா் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இத்திருக்கோவிலில் மூலவா் மகரநெடுங்குழைக்காதா்.
இந்த திருக்கோவிலில் பங்குனி பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன்படி இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. காலையில் கொடிப்பட்டம் ஊா்வலமாக ஏடுத்துச் செல்லப்பட்டது. மூலஸ்தானத்திலிருந்து கைத்தல சேவையாக உற்சவா் நிகரில் முகில்வண்ணன், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் கொடிமரம் முன்பு ஏழுந்தருளினாா். தொடா்ந்து கொடிமரத்தில் அமைந்துள்ள கருடாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா் கொடிக்கு மாலை மாரியாதைகள் செய்து கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
திருவிழா நாட்களில் தினமும் சுவாமி நிகரில் முகில் வண்ணன் பரங்கி நாற்காலி, ஆளும் பல்லக்கு, சிம்மம், அனுமார், சேஷ வாகனம் மற்றும் யானை, இந்திர, குதிரை வாகனத்தில் மாடவீதி மற்றும் ரதவீதிகளில் வீதி உலா வருதலும், கருடசேவையும் நடைபெறுகின்றது.விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகத்தினா் மற்றும் உபயதாரா்கள் செய்துவருகின்றா்.
Attachments area


