கருங்குளத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ மதிபீட்டு முகாமை பஞ்சாயத்து ஊராட்சி மன்றத் தலைவர் பார்வதிநாதன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.கருங்குளம் வட்டார வளாக மையத்தில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு அடையாள அட்டை மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு கை,கால் இயக்க குறைபாடு,தசை சிதைவு இயக்க குறைபாடு உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது.இதில் சுமார் 250க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் செக்காரக்குடி,இராமானூஜம்புதூர்,பூவாணி,கலியாவூர்,செய்துங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்து கலந்து கொண்டு பயன்பெற்றனர்.இந்நிகழ்வில் உதவி திட்ட அலுவலர் பெர்சியாள் ஞானமணி,மாவட்ட மாற்றுத்திறனாளி ஒருங்கிணைப்பாளர் இராஜசெல்வி,சிறப்பு ஆசிரியர்கள்,ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.வட்டார வள மைய ஆசிரியர்கள்,கருங்குளம் வட்டாரக கல்வி அலுவலர் செல்வக்குமார்,ஜெயபால்,மரிய ஜெய சீலா,தன்னார்வ ஆசிரியர் வில்சன்ராஜ்,கென்னடி,ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.இம்முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார மேற்பார்வையாளர் செய்திருந்தார்.ஜெயமேரி அற்புதம் ஒழுங்கு செய்திருந்தார்.


