திருப்புளிங்குடியில் ரூ.14 லட்சம் ரூபாய் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.
நவதிருப்பதி கோயில்களில் மூன்றாவது ஸ்தலமாக திருப்புளியங்குடி காசினிவேந்தன் பெருமாள் உள்ளது. இக்கோயிலுக்கு ஒரு வழியாக சென்று மறு வழியாக வெளியே செல்லும் சாலை மிக மோசமான நிலையில் இருந்தது.
இதனால், பக்தர்களும் பொதுமக்களும் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என திருப்புளியங்குடி பஞ்சாயத்து தலைவர் காசியம்மாள், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜிடம் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் கிராம பஞ்சாயத்து பத்தாவது நிதி குழு மாணியத்தில் இருந்து சாலையை சரி செய்யும் பணிக்காக ரூபாய் 14 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் சாலை அமைக்கும் பணிக்கான தொடக்க விழாவிற்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் வட்டார வளர்சி அலுவலர்கள் சுரேஷ், அன்டோ, காங்கிரஸ் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் தாசன், எஸ்.சி. எஸ்.டி பிரிவு வட்டத்தலைவர் லட்சுமணன், திருப்புளியங்குடி கிராம ஊராட்சி மன்றதலைவர் காசியம்மாள், துணைத் தலைவர் ஜெயராம், மாவட்ட பொதுச் செயலாளர் சங்கர், எம்எல்ஏ நேர்முக உதவியாளர் சந்திர போஸ், மாவட்ட பொருளாளர் எடிசன், காங்கிரஸ் வட்டாரத்தலைவர் நல்லக்கண்ணு, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயசீலன், இளைஞரணி பொறுப்பாளர் பிச்சை கண்ணு, மாவட்ட துணைச் செயலாளர் சீனிராஜேந்திரன்,மாவட்ட பொதுச் செயலாளர்கள் வெள்ளுர் அலங்கார பாண்டியன், நகர தலைவர் கருப்பசாமி, சித்திரை, நகரச் செயலாளர் நிலமுடையான், வட்டார மகளிரணி பஞ்சவர்ணம், வார்டு தலைவர் உஸ்மாயின், இளைஞரனி வட்டார தலைவர் தங்கபாண்டி, முத்துக் கருப்பன், வட்டார செயலாளர் பாரதி, நகர துணை செயலாளர் மதிசேகரன், நகர தலைவர் மகாராஜா, நகர பொருளாளர் சொரிமுத்து, உள்பட பலர் கலந்து கொண்டனர்.


