வெள்ளூர் சிவகாமி அம்மாள் மாசித் திருவிழா தேரோட்டம் நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் சிவகாமி அம்மாள் உடனுறை நடுநக்கர் மத்தியபதீஸ்வரர் திருக்கோயில் மாசித் திருவிழா தேரோட்டம் நடந்தது.
முடியுடை வேந்தர்களில் ஒருவராண பாண்டிய மன்னர் கால கட்டிடகலை அமைப்பை சார்ந்த சிவகாமி அம்மன்கோவில் 10ம்நுற்றாண்டை சார்ந்த பாண்டிய மன்னர் வீரபாண்டிய சடவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் இந்த கோவில் கட்டபட்டுள்ளது.
இக்கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு கடந்த 2ம் தேதி கொடியேற்றதுடன் திருவிழா தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் மாலை 7 மணிக்கு புஷ்பக வாகனம், பூதவாகனம், தந்த பல்லக்கு, சிம்ம வாகனம், ரிஷப வாகனம், இந்திர வாகனம் உள்ளிட்ட வாகனங்களின் சுவாமி சிவகாமி அம்மாள் எழுந்தருளும் வீதி உலா நடந்தது.
ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு சுவாமி சிவகாமி அம்மாள் திருத்தேருக்கு எழுந்தருளினார்.
காலை 9.35 மணிக்கு தீபாராதனை நடந்தது. காலை 9.45 மணிக்கு வான வேடிகை முழங்க பக்தர்கள் பக்தி பரவசதுடன் பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் ரதவிதிகளை சுற்றி மதியம் 12.15 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. பின்னர் சிவகாமி அம்மாள் கோவில் வளாகத்தில் வைத்து அன்னதானம் நடந்தது.
தேரோட்டத் திருவிழாவில், நிர்வாக அதிகாரி கண்ணன், தக்கார் இசக்கியப்பன், ஆய்வாளர் நம்பி, திருவிழா ஒருங்கிணைப்பாளரும், ஓய்வுபெற்ற காவல்துறை தலைவருமான ஜபிஎஸ் மாசானமுத்து, ஊர் தலைமைகாரர்கள் சங்கரபாண்டியன், சொர்ணபாண்டியன், தளவாய், துரை, முருகன், விவசாய சங்க தலைவர் அலங்காரம், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முத்தையா, ஒன்றிய கவுன்சிலர்கள் பொண்ராஜ், சுந்தரி, பஞ்சாயத்து தலைவர் குமார்பாண்டியன், ராமன், அண்ணதான ஒருங்கினைப்பாளர் வழக்கறிஞர் கருப்பசாமி, தொழில் அதிபர் மணிகண்ட பூபதி, பஞ்சாயத்து துணை தலைவர் வேல்மயில், அகில இந்திய பார்வடுபிளக் மாநில இளைஞரணி தலைவர் சுரேஷ்தேவர், திமுக ஒன்றிய செயலாளர் கொம்பையா, முன்னாள் ஒன்றிய செயலாளர் வைகுண்டபாண்டியன், திமுக மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், திமுக மாவட்ட மாணவரணி இலட்சுமணன், ஸ்லத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி நல்லகண்னு, தக்கார் சுப்பையா, ராஜ்மேகன், முருகன், மற்றும் ஊர் பொதுமக்கள், பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி., வெங்கடேசன் ஆலோசனையின் பேரில் இன்ஸ்பெக்டர் அண்ணராஜ் தலைமையில் சப்.இன்ஸ்பெக்டர்கள் ராஜாராபட், வசந்தகுமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் இசக்கி, தலைமை காவலர் ராஜமூர்த்தி, நிலைய அலுவலர் பேக்குவரத்து முத்துகுமார், தலைமையில் தீயணைப்பு படையினர் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.


