உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக கட்சி மாபெரும் வெற்றி பெற்றது.
இதனை கொண்டாடும் விதமாக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கருங்குளம் வடக்கு ஒன்றியம் தெய்வச்செயல்புரத்தில் வைத்து பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் கிஷோர்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பிரபு, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு பிரிவு தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சிப் பிரிவு மாவட்ட செயலாளர் பரமசிவம், மாவட்ட விவசாய அணி செயலாளர் நங்கமுத்து, மாவட்ட தமிழ் வளர்ச்சிப் பிரிவு சுரேஷ், கலை கலாச்சாரப் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் அழகுராஜ், அமைப்புசாரா பிரிவு மாவட்ட பொதுச்செயலாளர் ஓம் சக்தி ராமலிங்கம், ஒன்றிய பொதுச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


