வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகளிர் தின விழா நடைபெற்றது.
மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர்கள் டாரில், தோஷிபா, சித்த மருத்துவர் செல்வ குமார் , கண்காணிப்பாளர் அனந்தராமன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பெண்களுக்கான கோலம், வினாடி வினா போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசளிக்கப்பட்டது. பணியாளர்கள் அனைவரும் பங்குபெற்றனர். முடிவில் செவிலியர் ஜோஷி நன்றி கூறினார்.


