சாத்தான்குளம் அருகே வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதாக 7பேர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம்,சாத்தான்குளம் அருகே கடாட்சபுரத்தை சோ்ந்த நெல்சன் மகன் ஜெபக்குமாா் (22) கட்டடத் தொழிலாளியான. இவரது சகோதரா் வினோத்குமாா் (24) ஆகியோா் நேற்று சாத்தான்குளம் அருகே திருவரங்கநேரியில் பொது இடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த நொச்சிகுளத்தை சோ்ந்த அகஸ்டினுக்கும்(20) இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஜெபக்குமாருக்கு கத்திகுத்து விழுந்தது. வினோத்குமாரும் தாக்கப்பட்டாா். இதனை தொடா்ந்து அங்கு வந்த மேலும் 6 போ், சம்பவம் தொடா்பாக ஜெபக்குமாரிடம் சமாதானம் பேசியதுடன் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
மேலும் சம்பவம் தொடா்பாக போலீஸில் புகாா் அளிக்க கூடாது என மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச்சென்றனராம். இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெபக்குமாா் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனை சாா்பில் சாத்தான்குளம் போலீஸாருக்கு தகவ தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, நொச்சிகுளம் அகஸ்டின், முதலூா் லிவிங்ஸ்டன் (எ) பட்டு, சுவின், சுப்பராயபுரம் கருப்பசாமி, ஜோசப், மேலபனைகுளம் ராஜமிக்கேல், ராஜசிங் ஆகிய 7 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.