ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் நம்மாழ்வார் மாசித் திருவிழா 2வது நாள் தெப்ப உற்சவம் நடந்தது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் நவதிருப்பதிகளில் 9வது நவத்திருப்பதியுமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் திருக்கோவிலில் நம்மாழ்வார் மாசித் திருவிழா கொடியேற்றம் கடந்த 12ம் தேதி நடைபெற்றது.
13 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது.
ஒன்பதாம் திருவிழாவான நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது.
பத்தாம் திருவிழாவான நேற்று சுவாமி உற்சவர் பொலிந்து நின்ற பிரான் தாயார்களுடன் தெப்பத்தில் எழுந்தருளினார்.
11 ம் திருநாளான இன்று இரவு நம்மாழ்வார் மற்றும் ஆச்சாரியர்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். தெப்பத்தை மூன்று முறை சுற்றி வந்தார். இந்த விழாவில் ஆழ்வார்திருநகரி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். விழாவின் நிறைவு நிகழ்ச்சியான தீர்த்தவாரி நாளை நடைபெறுகிறது.
விழாவில் எம்பெருமானார் ஜீயர், திருக்குறுங்குடி பேரருளாள ராமானுஜ ஜீயர், மைசூர் பரகால ஜீயர், கோவில் நிர்வாக அதிகாரி அஜித், முன்னாள் அறங்காலவர் குழுதலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரியார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் போலிசார் செய்திருந்திருந்தனர்.


