ஏரல் பேரூராட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும் மகள் என மூன்று பேர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வெற்றி.
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி நகர்புற உள்ளாட்சித்தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இதில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட ஏரல் பேரூராட்சியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.
ஏரல் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 5 பேர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இதில் 15 வது வார்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட ஏரல் ரமேஷ் வெற்றி பெற்றார். மேலும் அவரது மகன் 22 வயதான பால கௌதம் 1 வது வார்டிலும், மகள் மதுமிதா 2வது வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும் மகள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.


