வடவல்லநாடு நடுநிலைப்பள்ளியில் சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவப் பிரிவு சார்பில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் பள்ளி மாணவ மாணவியருக்கு சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் செல்வகுமார் விழிப்புணர்வு கண்காட்சி, கண்காட்சி, நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள், கொரோனா விழிப்புணர்வு ஆகியன பற்றி பள்ளி மாணவ மாணவியருக்கு எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சி வல்லநாடு மேல்நிலைப்பள்ளி, வடவல்லநாடு நடுநிலைப்பள்ளி, பாரதி மழலையர் பள்ளி, முறப்பநாடு நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் இந்த சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.


