தூத்துக்குடி அருகே இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகேயுள்ள நடுவக்குறிச்சி, சுந்தர்ராஜ் நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் முத்துகனி (16). இவரை கடந்த 13ம் தேதி முதல் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து கணேசன் அளித்த புகாரின் பேரில் சாயர்புரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


