செய்துங்கநல்லூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அலுவலகம் முன்பு இன்று எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பிறந்த நாளை கொண்டாடினர்.
மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் திருவரங்கம், மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் மருதவிநாயகம், கருங்குளம் ஒன்றிய கவுன்சிலர் பேச்சிமுத்து, ஒன்றிய பாசறை செயலாளர் சுப்பிரமணியன், பொந்தன்புளி மாயாண்டி, கொம்பையா, வழக்கறிஞர் தில்லை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


