தூத்துக்குடி மாவட்டத்தில் திருவள்ளுவர் தினம் உட்பட 3 நாட்கள் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில், திருவள்ளுவர் தினம் (ஜன.15), வள்ளலார் நினைவு நாள் (ஜன.18) மற்றும் குடியரசு தினம் (ஜன.26) ஆகிய தினங்களில் தமிழ் நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை , பார்) விதிகள் 2003 விதி 12 துணை விதி (1)-ன் படி அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் அனைத்தும் மற்றும் எப்.எல்2, மற்றும் எப்.எல்3 உரிமத்திலுள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியபட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ் நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


