ஆதிச்சநல்லூரை பற்றி நூல் எழுத வேண்டும் என்று கடந்த 2009 ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூர் பரம்பில் அலைந்த சமயம் எனககு பல தகவல்களை தந்து என்னை ஆதிச்சநல்லூர் சிதம்பர தேவரிடம் அறிமுகம் செய்து, அவரிடமிருந்தும் பல தகவல்களை பெற்று தந்தவர் ஆர்.கே.ஆர். ராஜா. பண்மொழி புலவர். கருங்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர். கருங்குளம் பகுதியில் பல்வேறு திட்டங்கள் நடைபெற காரணமாக இருந்தவர். 1996 ல் தமிழகத்தில் பல்வேறு மாற்றங்கள் அரசியலில் ஏற்பட காரணமாக இருந்தவர். என்னை போன்ற எழுத்தாளர் வளர வழிகாட்டியாக இருந்தவர். அவருககு ஜனவரி 7 ந்தேதி பிறந்தநாள். அவரை நினைவு கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் – முத்தாலங்குறிச்சி காமராசு


