தென்காசி மாவட்டம், ஆலங்குளம் மங்கம்மாள் சாலை தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி நாகக்கனி(40). சுமார் 20 பேர்கள் கொண்ட குழுவினருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நடைபயணமாக சென்றனர். இரவு 9 மணி அளவில் செய்துங்கநல்லூரை அடுத்த கருங்குளம் தூதுகுழி குளத்தின் கரையில் வழியாக சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
மற்றவர்கள் வேகமாக முன்னால் சென்று கொண்டிருந்தனர். தனியாக சென்று கொண்டிருந்த நாகக்கன்னி மீது அடையாளம் தெரியாத வெள்ளை நிற கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நாகக்கன்னி சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஆனால் அந்த வெள்ளைநிறக்கார் சிட்டாய் பறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் செய்துங்கநல்லூர் போலிஸ் சப் இன்ஸ்பெக்டர் அனந்த முத்துராமன் சம்பவ இடத்திற்கு சென்று நாகக்கன்னி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதயாத்திரை சென்ற இடத்தில் உடன் வந்த பெண்பக்தர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


