செய்துங்கநல்லூர் முருகன் கோயில் மேலத்தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர் முத்தாலங்குறிச்சி கிராமத்தில் துப்புறவு பணியாளராக வேலைபார்த்து வருகிறார்கள். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். நிரந்தரவேலையும், சொந்த வீடும் இல்லாமல் இருந்த இந்த குடும்பத்தில் தீடீரென்று நோய் தொற்றி கொண்டது. கிருஷ்ணவேணிக்கு தீடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டது. அதை தீர்க்க மருத்துவம் பார்த்த போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருந்தது. எனவே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மக்கள் கொடுத்த பங்களிப்பு தொகையை வைத்து அறுவை சிகிச்சை செய்தார். ஆனால் அந்த அறுவை சிகிச்சை போதிய பலனளிக்கவில்லை. தற்போது கூடுதல் அறுவை சிகிச்சை செய்தால் தான் குணமாகும் என்று மருத்துவர்கள கூறிவிட்டார்கள். இதனால் இந்த அறுவை சிகிச்சை செய்ய உதவி செய்ய வேண்டும் என்று இன்று ஆறாம்பண்ணை வந்த ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்த்தராஜ் அவர்களிடம் கிருஷ்ணவேனியின் கணவர் சுப்ரமணியன் மனு கொடுத்தார்.
இது குறித்து கிருஷ்ணவேணி கூறும் போது, அருந்ததியர் சமுகத்தை சார்ந்த எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. என் கணவர் முத்தாலங்குறிச்சி பஞ்சாயத்தில் துப்புறவு பணியாளராக வேலை பார்த்தார். தற்போது எனக்கு நோய் இருப்பதால் என்னை கூட்டிக்கொண்டு அலைவதால் அந்த பணிக்கும் நிரந்தரமாக செல்ல இயலவில்லை. தற்போது கூலித் தொழிலாளியாக உள்ளார்., சொந்த வீடும் இல்லை. நிரந்தர வேலையும் இல்லை .இப்படி இருக்கும் பட்சத்தில் நான் நோயுடன் இருக்கிறேன்.கடந்த 3 வருடமாக வயிறு வலியால் அவஸ்த்தைபட்டு ஒரு அறுவை சிகிச்சை செய்தேன். அதில் பிழை இருப்பதனால் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்தால் தான் நல்லது என மருத்துவர் கூறிவிட்டார். ஆகவே என்னிடம் பணம் இல்லாத காரணத்தால் மிகவும் வறுமையில் உள்ளேன்.அதலால் என் மருத்துவ செலவிற்கு எங்கள் தொகுதி எம்.எல்.ஏ எனக்கு உதவுவார் என நம்புகிறேன். என்று கூறினார்.


