செய்துங்கநல்லூரில் குழந்தைகளுக்கு உபயோகிக்கும் சோப்பில் பிளேடு இருந்ததால் பெற்றோர் அதிர்ச்சி.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரைச் சேர்ந்தவர் சதாம் உசேன். இவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருநெல்வேலியில் உள்ள அப்பல்லோ பார்மசியில் தனது குழந்தையை குளிப்பாட்ட ஹிமாலயா சோப் வாங்கி வந்துள்ளார். தொடர்ந்து ஒரு மாத காலமாக குழந்தைக்கு சோப் போட்டு குளித்து வந்துள்ளனர்.
கடந்த வாரம் குழந்தையை குளிப்பாட்டிக் கொண்டிருக்கும் போது, சோப்பின் உள்ளே ஒரு இரும்பு பொருள் இருப்பது போல் தெரிந்தது. உடனே அதனை உரசி பார்த்த போது உள்ளே இரும்பு பிளேடு இருந்தது. இதனை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து குழந்தையின் தாய் சபானா கூறும்போது, எனது குழந்தைக்கு கடந்த மாதம் வாங்கிய சோப்பில் பிளேடு இருந்தது அதிர்ச்சி அளிக்கிறது.


